அதிர்ச்சி! கல்குவாரி குட்டையில் மூழ்கி மூதாட்டி, 3 குழந்தைகள் பலி!!
அதிர்ச்சி! கல்குவாரி குட்டையில் மூழ்கி மூதாட்டி, 3 குழந்தைகள் பலி!!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கல்குவாரியில் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி விடுமுறை என்பதால் சிறுவர்கள் சிலர் பெருமுக்கல் கிராமத்துக்கு தங்களின் பாட்டி புஷ்பா என்பவரது வீட்டுக்கு சென்றனர். பேரப் பிள்ளைகளை மூதாட்டி புஷ்பா, செயல்படாத கல்குவாரி குட்டைக்கு குளிப்பதற்காக அழைத்து சென்றார்.
அப்போது குழந்தைகள் 3 பேரும் அடுத்தடுத்து குட்டையில் தவறி விழுந்தனர். இதை பார்த்து செய்வதறியாது திகைத்த மூதாட்டி புஷ்பா பேரக்குழந்தைகள் 3 பேரையும் காப்பாற்ற முயற்சி செய்தர். ஆனால் அவரும் தவறி விழுந்ததில் 4 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர்.
சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக மூழ்கி புஷ்பா (வயது 60), வினோதினி (16), ஷாலினி (14), கிருஷ்ணன் (8) ஆகிய 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், 4 பேரின் உடல்களை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குட்டையில் மூழ்கி பேரக்குழந்தைகள் 3 பேருடன் மூதாட்டி பலியான சம்பவம் பெருமுக்கல், களவாய் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in