அதிர்ச்சி! மனைவியை ஒன்றரை லட்ச ரூபாய்க்கு விற்ற கணவன்!!
அதிர்ச்சி! மனைவியை ஒன்றரை லட்ச ரூபாய்க்கு விற்ற கணவன்!!
சண்டை போட்டதால் மனைவியை கணவன் ரூ.1.5 லட்சத்திற்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், ராம்பூர் கிராமத்தில் பெண் ஒருவர் கடத்தப்பட்டு ராஜஸ்தான் கொண்டு செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் பிரஜாபதி என்றவர் அப்பெண்ணை கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அதிர வைக்கும் உண்மைகள் தெரியவந்தது.
கடத்த முயன்ற அந்தப் பெண் ஒடிசா மாநிலம், ஜார்சுகுடா மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ள நிலையில், அடிக்கடி அவருக்கும் கணவருக்கும் சண்டை வந்துள்ளது.
இதனால் அவரது கணவர் ரூ.1.5 லட்சத்திற்கு மனைவியை மனோஜ் பிரஜாபதியிடம் விற்றுள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணை கட்டாய திருமணம் செய்ய ராஜஸ்தான் கடத்த முயற்சி செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் மனோஜ் பிரஜபதியையும், அவருக்கு உடந்தையாக இருந்த மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் அந்த பெண்ணின் கணவரையும் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
newstm.in