அதிர்ச்சி! மனைவியை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கணவர்!! VIDEO

அதிர்ச்சி! மனைவியை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கணவர்!! VIDEO

Update: 2022-07-21 20:42 GMT

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே அர்செனா கிராமத்தை சேர்ந்த குசுமாதேவி என்பவரை அவரது கணவர் ஷியாம்பிஹாரி, கடந்த 14ஆம் தேதி அன்று மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சம்பவம் தொடர்பாக போலிஸார் விசாரணை நடத்தினர். அதில் அந்த சம்பவம் உறுதியானதை அடுத்து, ஷியாம்பிஹாரி மற்றும் அவரது தாயார் பர்பாதேவி மீது வழக்குப்பதிவு செய்தனர்.


இந்த சம்பவத்துக்கு காரணம் என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை. தாக்குதல் குறித்து போலீஸில் புகார் அளிக்கக் கூடாது என்று குசுமா தேவி மிரட்டப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட ஷியாம்பிஹாரி , அவரது தாயார் பர்பாதேவி ஆகியோர் தலைமறைவான இருக்கின்றனர் என்றும் அவர்கள் விரைவில் கண்டறியப்பட்டு கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Similar News