அதிர்ச்சி! மீண்டும் கசிந்த 12ஆம் வகுப்பு வினாத்தாள்!!
அதிர்ச்சி! மீண்டும் கசிந்த 12ஆம் வகுப்பு வினாத்தாள்!!
இன்று நடைபெறும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு கணித பாட வினாத்தாள் மீண்டும் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2ஆம் கட்ட திருப்புதல் தேர்விற்கான வினாத்தாள் கசிவுக்கு இடமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில், சமூகவலைத்தளங்களில் வினாத்தாள் கசிந்தது.
ஏற்கனவே முதற்கட்ட திருப்புதல் தேர்வில் அனைத்து பாட வினாத்தாள்களும் முன்கூட்டியே கசிந்த நிலையில், அது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் ஒரு முறை இதே போன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. முதல் கட்ட திருப்புதல் தேர்வின் போது அனைத்து வினாத்தாள்களும் வெளியாகி தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஆனாலும் அதே வினாத்தாள்களை கொண்டு தேர்வினை நடத்திய பள்ளிக்கல்வித்துறை, இனி இப்படி நிகழாது என தெரிவித்தது. ஆனால் மீண்டும் வினாத்தாள் கசிவு என்பது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் 12ஆம் வகுப்பு கணித பாட வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், புதிய வினாத்தாளைக் கொண்டு கணித பாட தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கமளித்துள்ளார்.
newstm.in