அதிர்ச்சி! வீடுகளின் சுவர்களில் கோடிக்கணக்கான கொசுக்கள்!!

அதிர்ச்சி! வீடுகளின் சுவர்களில் கோடிக்கணக்கான கொசுக்கள்!!

Update: 2022-03-01 09:59 GMT

வீடுகளின் சுவற்றில் கோடிக்கணக்கில் கொசுக்கள் மொய்த்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி 25வது வார்டு கிருஷ்ணசாமி தெருவில், குடியிருப்பு  பகுதிக்கு அருகே மாநகராட்சியின் குப்பை கிடங்கு பல ஆண்டு காலமாக உள்ளது. அங்கு துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகி வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், கோரிக்கை மனுவாகவும் கொடுத்து உள்ளோம். ஆனால் இதுவரை, மாநகராட்சி நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகிறது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

தெருக்களில் உள்ள குடியிருப்புகளில் உள்ள வீடுகளின் சுவர்களில் கோடிக்கணக்கில் கொசுக்கள் மொய்த்து கொண்டிருக்கின்றன. குழந்தைகள், பெரியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

இரவு நேரத்தில் வீடுகளில் அமர்ந்து நிம்மதியாக சாப்பிட கூட முடியவில்லை என வேதனையோடு அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். கொசுக்கள் உற்பத்தியாகும் இடத்தை கண்டறிந்து அவற்றை முற்றிலும் அழிக்க வேண்டும் என அப்பகுதி கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் நிம்மதியுடன் உறங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் மாநகராட்சி நிர்வாகம் விரைவில் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

Similar News