அதிர்ச்சி! ஆயிரத்தை தாண்டிய குரங்கு அம்மை!!
அதிர்ச்சி! ஆயிரத்தை தாண்டிய குரங்கு அம்மை!!
இதுவரை 29 நாடுகளில் 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது என்று கூறியுள்ள உலக சுகாராத அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுவரை மங்கிபாக்ஸ் நோயால் யாரும் உயிரிழக்கவில்லை. இருந்தாலும் ஆப்ரிக்க நாடுகளில் மட்டுமே காணப்பட்ட இந்த வைரஸ் தற்போது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் பரவியுள்ளது.
இதை தடுக்க வைரஸ் இருந்தாலும் அதன் எண்ணிக்கை தற்போது குறைந்த அளவே உள்ளது எனக் கூறியுள்ள சுகாதார அமைப்பு, பாதிப்புக்குள்ளன 29 நாடுகளில் நோயை தடுக்க மாபெரும் அளவில் தடுப்பூசி திட்டங்களை செயல்படுத்துவது அவசியம் என்று கூறியுள்ளது.
இந்த நோய் பாதிப்பு கொண்டவர்கள் வீட்டிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும். வீட்டிலும் மற்ற நபர்களிடம் தொடர்பு கொள்ள கூடாது என உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்கள் இந்த மங்கிபாக்ஸ் வைரசிடம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். உடல் முழுவதும் தோள்களில் புண் மற்றும் வீக்கம் ஏற்பட்டு காய்ச்சல், தலை மற்றும் உடல் வலி போன்றவை ஆரம்ப நாள்களில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in