அதிர்ச்சி! இரக்கமின்றி 8 மாத குழந்தையை தாக்கிய செவிலி தாய்!!

அதிர்ச்சி! இரக்கமின்றி 8 மாத குழந்தையை தாக்கிய செவிலி தாய்!!

Update: 2022-02-05 20:20 GMT

இரக்கமே இல்லாமல் 8 மாதக்குழந்தையை கொடூரமாக அடித்து தாக்கிய செவிலித்தாய் கைது செய்யப்பட்டுள்ளார்

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் ராந்தேர் பாலன்புர் பாட்டியா பகுதியில் மிதேஷ் படேல் மற்றும் அவரது மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தைகளை பராமரிக்க 3 மாதங்களுக்கு முன்பு செவிலித்தாயை நியமித்தனர்.

இருவரும் வேலைக்குச் சென்றபிறகு குழந்தைகள் சத்தமாக அழுதுகொண்டே இருப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதனால் ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்த பெற்றோர் தாங்கள் வெளியே சென்றபிறகு வீட்டில் என்னதான் நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள சிசிடிவி கேமராவை பொருத்தினர்.

சிசிடிவி கேமிராவில் தங்களுடைய 8 மாத ஆண்குழந்தையை செவிலித்தாய் கொடூரமாக அடித்ததுடன், கட்டிலில் குழந்தையின் தலையை இடித்து தாக்கிய காட்சிகள் பதிவாகியிருந்தது. கொஞ்சகூட இரக்கமே இல்லாமல் குழந்தையின் முடியை சுருட்டி இழுத்த காட்சிகளும் பதிவாகியிருந்தது.

உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டுசென்று பரிசோதித்ததில் குழந்தைக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. தற்போது 8 மாத குழந்தை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில் செவிலித்தாய் கோமல் சந்த்லேகரை கைதுசெய்த போலீசார் அவர்மீது கொலைமுயற்சி வழக்கு பதிவுசெய்துள்ளனர். மேலும் கோமலுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆவதாகவும், அவருக்கு இதுவரை குழந்தை இல்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

newstm.in

Similar News