நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் செலின் மேத்யூவின் உடல் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நண்பர்கள் இடையே ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக ஷெரின்  மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தார் என்றும் தனது இணையதள பக்கங்களில் மனவருத்தத்துடன் பல பதிவுகள் போட்டார் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரது உடல் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் வைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து கொச்சி பாலேரி வட்டம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து  நண்பர்களிடத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்ததில் ஷெரினுக்கு ஒரு காதலன் இருப்பதும்  தெரியவந்தது.

காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் ஷெரினின் காதலன் தலைமறைவாகியுள்ளார்.  பாலாரிவட்டம் போலீசார்  தலைமறைவாக உள்ள ஷெரினின்  காதலனை தேடி வருகின்றனர்.

newstm.in