அதிர்ச்சி! மகளை இரையாக்கிய கொடூர தந்தை!!

அதிர்ச்சி! மகளை இரையாக்கிய கொடூர தந்தை!!

Update: 2022-03-20 20:08 GMT

பீகாரைச் சேர்ந்த குடும்பம்  மகராஷ்டிராவின் புனேவில் வசித்து வருகிறது. அக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிக்குதான் கொடூரம் நடந்துள்ளது. பாலியல் ரீதியான ஆலோசனை பள்ளியில் நடைபெற்றது. அப்போது, தனக்கு நேர்ந்தது குறித்து பாதிக்கப்பட்ட அச்சிறுமி ஆசிரியரிடம் கூறியிருக்கிறார். 

இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் சார்பில் சிறுமியின் புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையில் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. அதில், கடந்த 2017ம் ஆண்டு முதலே அச்சிறுமி தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வருவதும், 2020ம் ஆண்டு அச்சிறுமியின் சகோதரனும், பிறகு தாத்தா மாமா ஆகியோரும் பாலியல் கொடுமை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுபோக, சிறுமியிடம் தவறாக நடந்துக்கொண்ட நிகழ்வு குறித்து குற்றஞ்சாட்டப்பட்ட எவருக்கும் ஒருவரை ஒருவர் தெரிந்திருக்கவில்லை எனவும் கூறப்பட்டிருக்கிறது.

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலிஸார் 45 வயதான தந்தை, சகோதரன், தாத்தா மற்றும் மாமா ஆகிய நால்வர் மீது 376, 354 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

Similar News