அதிர்ச்சி! பாட்டியை கழுத்தறுத்து கொல்ல முயன்ற பேரன்!!

அதிர்ச்சி! பாட்டியை கழுத்தறுத்து கொல்ல முயன்ற பேரன்!!

Update: 2022-05-16 08:14 GMT

கோவை தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்தி என்ற இளைஞர் சரியாக பணிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கார்த்தி செலவிற்கு பணம் கேட்டு பாட்டி மீனாவிற்கு தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மூதாட்டி வட்டிக்கு பணம் வாங்கி கார்த்திக்கிற்கு கொடுத்துள்ளார்.

தொடர்ந்து சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்த கார்த்தி பாட்டி வாங்கி கொடுத்த கடனுக்கும் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி, வீட்டிற்கு சாப்பிட வந்த கார்த்தியிடம் வட்டிக்கு வாங்கி கொடுத்த பணத்தை கேட்டுள்ளார்.

இதில் பாட்டிக்கும், பேரனுக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கார்த்தி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார். பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

காயமடைந்த பாட்டியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேரன் கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Similar News