அதிர்ச்சி! மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!!
அதிர்ச்சி! மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!!
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே நெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான பாண்டி(51) என்பவர் சித்தரேவு அரசு டாஸ்மாக் மதுபான கடைக்கு மதுபானம் வாங்குவதற்காக சென்றார்.
அவர் டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.150 கொடுத்து குவாட்டர் அளவுள்ள மதுபான பாட்டிலை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய மதுபான பாட்டிலை திறப்பதற்காக குலுக்கிய போது பாட்டிலின் உட்புறம் ஏதோ மிதப்பதைக் கண்டு அதிர்ச்சிடைந்தார். அதன்பின்பு மதுபான பாட்டிலை கூர்ந்து கவனித்தார்.
அப்போது பாட்டிலின் உட்புறம் இறந்த நிலையில் குட்டித் தவளை ஒன்று மிதந்து கொண்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து, சித்தரேவு டாஸ்மார்க் கடையின் விற்பனையாளரிடம் முறையிட்டார். அவர் முறையான பதில் அளிக்காமல் வேறு பாட்டில் தருவதாக கூறியுள்ளார்.
ஆனால் திருப்தியடையாத பாண்டி அதனை அவரிடம் கொடுக்காமல் வீட்டிற்கு எடுத்து வந்து வைத்துள்ளார். பின்னர் இதுகுறித்து சமூக வலைதளங்ளில் பதிவிட்டதை அடுத்து, பலரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மதுபான ஆலையின் பொறுப்பில்லாத நடவடிக்கையால் இதுபோன்ற தவறுகள் நடப்பதாக குற்றம் சாட்டினர். மதுபான பாட்டிலுக்குள் குட்டித் தவளை மிதந்த சம்பவம் மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
newstm.in