அதிர்ச்சி! கை, கால்களை கட்டி மகளுக்கு கொடூர தண்டனை வழங்கிய தாய்!!

அதிர்ச்சி! கை, கால்களை கட்டி மகளுக்கு கொடூர தண்டனை வழங்கிய தாய்!!

Update: 2022-06-10 10:38 GMT

வீட்டுப்பாடம் செய்யாத, 5 வயது மகளின் கை, கால்களைக் கட்டி அவரது தாய் உச்சி வெய்யிலில் மொட்டை மாடியில், படுக்கவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் துக்மீர்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் – சப்னா தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், வீட்டுப்பாடம் செய்யாத தனது 5 வயது மகளின் கை, கால்களைக் கட்டி மொட்டை மாடியில் உச்சி வெய்யிலில் படுக்கவைத்து தாய் சப்னா கொடூர தண்டனை கொடுத்துள்ளார்.

வெப்பம் தாக்க முடியாமல் சிறுமி கதறித் துடித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து சிறுமியை மீட்டு கீழே வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். பொதுவாகவே சிறுமியின் தாய் முரட்டுக் குணம் கொண்டவர் என்று கூறப்படுகிறது.

குளிர் காலத்தில் கூட உடைகள் இல்லாமல் குழந்தைகளை நிர்வாணமாக நிற்க வைத்து தண்டனை கொடுத்துள்ளார் என அக்கம்பக்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், சிறுமியின் கை,கால்கள் கட்டப்பட்ட சிலையில் மொட்டை மாடியில் வலியால் துடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Similar News