அதிர்ச்சி! அத்தையை கொன்று புதைத்த மருமகன்!!

அதிர்ச்சி! அத்தையை கொன்று புதைத்த மருமகன்!!

Update: 2022-02-14 08:28 GMT

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே சொத்துக்காக அத்தையை கொன்ற மருமகனை போலீஸார் கைது செய்தனர்.

சூரப்பள்ளம் ஏரி பகுதியில் கை மட்டும் வெளியே தெரியும்படி சடலம் ஒன்று புகைக்கப்பட்டிருப்பதாக பட்டுக்கோட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜேஷ் உள்ளிட்ட போலீஸார்  அங்கு சென்று புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை வெளியே எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதில் அந்த பெண், திட்டக்குடியை சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மனைவி அன்னபூரணி (55) என்பது தெரியவந்தது. அவர் அணிருந்த நகைகள் இல்லாததால் நகைக்காக யாரும் கொலை செய்தார்களா அல்லது வேறு எதுவும் காரணமா என போலீசார்  விசாரணை செய்தனர்.

கொலை நடந்து 15 நாட்கள் ஆகியும் காவல்துறையினருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. அவரின் உறவினர்களிடம் காவல்துறை தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில்அன்னபூரணி புதைக்கப்பட்ட இடத்தில் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தனர்.

அதில் அன்னபூரணியின் அண்ணன் மகன் முருகானந்தம் (30) என்பவரின் செல்போன் எண் காட்டியது. இதையடுத்து போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், அவர் அன்னபூரணியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அன்னபூரணி பெயரில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான சொத்துகள் பட்டுக்கோட்டையில் உள்ளது. அந்த சொத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு முருகானந்தம் அத்தை அன்னபூரணியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முருகானந்தம் அன்னபூரணியை அடித்து கொலை செய்து, உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து ஏரிப்பகுதிக்கு கொண்டு சென்று புதைத்ததை ஒப்புக்கொண்டார்.இதையடுத்து முருகானந்தத்தை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Similar News