அதிர்ச்சி! தூங்கிக் கொண்டிருந்த குழந்தை மீது விழுந்த ஸ்பீக்கர்!!
அதிர்ச்சி! தூங்கிக் கொண்டிருந்த குழந்தை மீது விழுந்த ஸ்பீக்கர்!!
திருவண்ணாமலையில் ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்ததில் 3 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் பிச்சனந்தல் கிராமத்தைச் சேர்ந்த விஜய் – பரணி தம்பதிக்கு 3 வயதில் மகன் உள்ளார். 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் பரணி, குழந்தை சுபஸ்ரீயை வீட்டின் ஹாலில் படுக்கவைத்து விட்டு தனது முதல் மகனுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் சுபஸ்ரீ மீது விழுந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பரணி, உடனே குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்பீக்கர் பாக்ஸ் விழுந்ததில் 3 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in