அதிர்ச்சி! ஆசிரியையை கத்தியால் குத்திய மாணவன்!!
அதிர்ச்சி! ஆசிரியையை கத்தியால் குத்திய மாணவன்!!
ஆசிரியை ஒருவரை மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆங்கில ஆசிரியராக ரேகா (42) என்பவர் பணியாற்றி வருகிறார். அவர், மதிய உணவு சாப்பிட்டு விட்டு வீட்டில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்.
அப்போது 18 வயது மதிக்கத்தக்க மாணவன் கையில் வைத்திருந்த கத்தியால் ஆசிரியரை தலையில் தாக்கினார். இதில் காயமடைந்த அவர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கத்தியால் வெட்டும் போது கீழே குனிந்ததால் பெரிய அளவு பாதிப்பின்றி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். வெட்டிய மாணவனின் அடையாளம் குறித்து தெரியவில்லை.
இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
newstm.in