அதிர்ச்சி! லிவிங் டு கெதரில் வாழ்ந்த பெண் திடீர் மரணம்!!

அதிர்ச்சி! லிவிங் டு கெதரில் வாழ்ந்த பெண் திடீர் மரணம்!!

Update: 2022-02-13 10:07 GMT

சென்னை சூளை பகுதியில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் ஜெயின் (40) என்பவர் சவுகார்பேட்டையில் தனது தந்தையின் துணிக்கடையை கவனித்து வருகிறார்.

திருமணமான சந்தீப் ஜெயின், மனைவியிடமிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றார். இந்த நிலையில் அவருக்கு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளைச்சி (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இளைச்சியும் தனது கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக லிவிங் டுகெதர் முறையில் சென்னை சூளையில் தனியார் குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் இளைச்சிக்கு அவரது பெற்றோர் ராஜஸ்தானில் ஒருவரை திருமணம் செய்து முடிக்க வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இளைச்சியும் ராஜஸ்தான் மாநிலம் செல்வதற்காக தனது துணிமணிகளை எடுத்து தயார் செய்து வைத்திருக்கிறார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திடீரென சந்தீப் ஜெயின் மற்றும் இளைச்சியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக பெரியமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

பெரியமேடு போலீசார் வீட்டில் வந்து பார்த்த போது இருவரும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இதில் படுகாயமடைந்த இளைச்சி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். சந்தீப் ஜெயின் 80 சதவீத காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சந்தீப் ஜெயின் இளைச்சியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்தாரா, அல்லது இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Similar News