அதிர்ச்சி! சிறுமியை கடத்தி சில்மிஷம் செய்த இளைஞர்!!
அதிர்ச்சி! சிறுமியை கடத்தி சில்மிஷம் செய்த இளைஞர்!!
11 வயது சிறுமியை கடத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் வசிக்கும் 11 வயது சிறுமியை, காணவில்லை என கடந்த 17.06.2016 அன்று சிறுமியின் தந்தை புகார் கொடுத்தார். விசாரணையில் சிறுமியின் குடும்பத்திற்கு தெரிந்த நபர், சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.
போலீஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு, சிறுமியை அழைத்துச் சென்ற சேதுபதி (எ) ஞானசேகரன் (21) மற்றும் அவருக்கு உதவிபுரிந்த பாபு (21) ஆகியோரை பிடித்து, சிறுமியை மீட்டனர். சேதுபதி சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன்பேரில் வழக்கு, போக்சோ சட்டப்பிரிவுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு, சேதுபதி , பாபு, ஆகிய இருவரை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். வழக்கு விசாரணை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
சேதுபதி மீது குற்றம் நிருபிக்கப்பட்டதால், 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20,000அபராதம், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை என போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
மேலும் 2வது குற்றவாளி பாபு இவ்வழக்கில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்திய போலீஸாரை பெருநகர காவல் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.
newstm.in