அதிர்ச்சி! பேஸ்புக் காதலியை தேடிச் சென்ற இளைஞர் மாயம்!!

அதிர்ச்சி! பேஸ்புக் காதலியை தேடிச் சென்ற இளைஞர் மாயம்!!

Update: 2022-07-13 19:15 GMT

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே நரிமான் மூடு பகுதியை சேர்ந்த கிரண் என்பவருக்கும், ஆழிமலை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் முகநூல் வழியாக பழக்கம் ஏற்பட்டது . நாளடைவில் இவர்களுக்கு இடையே  பிரச்னைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை கிரண் தனது இரு நண்பர்களுடன் முகநூல் வழியாக அறிமுகமான பெண்ணை நேரில் சந்திக்க ஆழிமலை பகுதியில் உள்ள அந்த பெண்ணின் வீட்டின் முன்பே அங்கும் இங்குமாக சுற்றி திரிந்துள்ளார்.

இதைக்கண்ட அந்த பெண் தனது சகோதரனிடம் விவரத்தை கூறியுள்ளார். சகோதரன், அக்கா கணவர் உட்பட உறவினர் ஒருவரும் சேர்ந்து கார் மற்றும் பைக்கில் வந்து கிரண் மற்றும் அவரது இரு நண்பர்களையும் அடித்து உதைத்து காரில் ஏற்றி ஆழிமலை கடல் பகுதிக்கு கொண்டு சென்றனர்.

அவர்களிடம் இருந்து தப்பிய கிரண் பயந்து ஓடியதாக கூறப்படுகிறது. பின்பு கிரண் மாயமானார். கிரணை காணாமல் அவரது குடும்பத்தார் நரிமான் மூடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

பெண்ணின் சகோதரன் உட்பட அக்கா கணவன், உறவினர் ஒருவரையும் கைது செய்து வழக்கும் பதிவு செய்து மேலும் விசாரணையை மேற்கொண்டனர். அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் கிரண் பயந்து திரும்பிப் பார்த்து ஓடும் காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தன.

இந்த நிலையில்  கடற்கரையோரம் பயந்து ஓடிய கிரண் கால் தவறி கடலுக்குள் விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசாரும் , கடலோர படையினரும் 5 நாட்களாக கிரணின்  உடலை தேடி வந்தனர்.

இந்த நிலையில் குமரி மாவட்டம்  இரையுமன்துறை கடற்பகுதியில் உடல் முழுவதும் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. அது காணாமல் போன கிரணாக இருக்கலாம் என கேரளா போலீசாரும், தமிழக போலீசாரம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிரணின் உறவினர்களாலும் இறந்தவர் யார் என்று சரியாக அடையாளம் காண முடியவில்லை. அதனால் அந்த உடலை போலீசார் டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

newstm.in

Similar News