அதிர்ச்சி! கணவரின் சடலத்துடன் 2 நாட்கள் இருந்த மனைவி!!
அதிர்ச்சி! கணவரின் சடலத்துடன் 2 நாட்கள் இருந்த மனைவி!!
பூட்டப்பட்ட வீட்டுக்குள் நிர்வாணமாக இறந்து கிடந்த கணவரின் சடலத்துடன் 2 நாட்கள் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை புரசைவாக்கத்தில் அசோக் பாபு (53) என்பவரின் மகன் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். திருமணமான அவரது மகள் தனது கணவர் குடும்பத்தோடு பெங்களூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் மகள் ஆர்த்தி இரு தினங்களாக தந்தைக்கு போன் செய்துள்ளார்.
ஆனால் அவர் போன் எடுக்காததால் வேப்பேரி போலீசாருடன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக தாழிட்ட நிலையில் அசோக் பாபு நிர்வாணமாக இறந்து கிடந்தார். அருகில் மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி பத்மினி (48) இறந்துபோன அசோக் பாபுவையே பார்த்துக் கொண்டு இருந்தார்.
மேலும் கதவை உள்பக்கமாக பூட்டிகொண்டு யாரையும் கதவை திறக்கவிடாமல் இருந்தார். இதனையடுத்து வேப்பேரி போலீசார் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர்.
இறந்து கிடந்த அசோக் பாபுவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனநலம் பாதிக்கப்பட்டு இரு தினங்களாக சடலத்துடன் வாழ்ந்து வந்த அசோக் பாபுவின் மனைவி பத்மினியை அரசு மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அசோக்பாபுவின் உடலின் மார்புக்கு மேல் இரண்டு கை மற்றும் கழுத்தின் அருகில் தோல் உறிந்த நிலையிலும் முகம் அழுகியும், உடல் உப்பிய நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 174-ன் படி இயற்கைக்கு மாறான மரணம் என்ற அடிப்படையில் வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in