அதிர்ச்சி! கட்டடப் பணியின் போது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி!!
அதிர்ச்சி! கட்டடப் பணியின் போது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி!!
மதுரையில் கட்டடப் பணியின்போது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விரகனூர் ரிங்ரோடு சந்திப்பு அருகே அருப்புக்கோட்டை சாலையில் விவேக் என்பவருக்கு சொந்தமான திருமண மண்டபத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகிறது. கட்டடம் நீர்நிலைப்பகுதியில் கட்டப்படுவதாக ஏற்கனவே புகார் எழுந்தது.
இந்நிலையில் கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டிருந்த போது திடீரென கட்டிடத்தின் சுவர் ஒன்று இடிந்து விழுந்தது. அப்போது பணியில் இருந்த தொழிலாளியான விருதுநகர் மாவட்டம் அரசங்குளம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் கட்டட இடிபாடிகளில் சிக்கி உயிரிழந்த தொழிலாளியின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் விபத்திற்கு காரணமான கட்டிட உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in