அதிர்ச்சி! விளம்பர பலகையால் உயிரிழந்த இளைஞர்!!
அதிர்ச்சி! விளம்பர பலகையால் உயிரிழந்த இளைஞர்!!
சட்ட விரோத விளம்பர பதாகையின் கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ஹெப்பல் பேருந்து நிழற்குடைக்கு 30 வயது இளைஞர் ஒருவர் வந்தார். அந்த நபர் நிழற்குடையில் இருந்த பெஞ்சில் அமர்ந்தவுடன் அவர் மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது. பேருந்து தங்குமிடத்தின் உலோகப் பகுதியை இளைஞர் தொட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விளம்பரப் பலகையை ஒளிரச் செய்வதற்காக தனியார் விளம்பர நிறுவனம் ஒன்று சட்ட விரோதமாக வைத்த மின்சாரக் கம்பியை இளைஞர் தொட்டதால் மின்சாரம் பாய்ந்ததாக பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேருந்து நிழற்குடைக்கு மின்சாரம் எடுப்பதற்காக ஒரு தனியார் விளம்பர நிறுவனம் மூலம் அலுமினிய வயர் மூலம் மின்சாரம் அனுமதியின்றி நீட்டிக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் துறை சாராத விபத்து என்றும், இது உயிரிழப்பு என்பதால், சட்டவிரோதமாக மின் இணைப்புகளை பெற்ற தனியார் விளம்பர நிறுவனம் மீது பெஸ்காம் கண்காணிப்பு பிரிவு புகார் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in