அதிர்ச்சி..!! 44 லட்சம் யூடியூப் சேனல்கள் நீக்கம்!!

அதிர்ச்சி..!! 44 லட்சம் யூடியூப் சேனல்கள் நீக்கம்!!

Update: 2022-06-03 12:28 GMT

கூகுளுக்குச் சொந்தமான யூடியூப், 2022-ன் முதல் மூன்று மாதங்களில் உலகில் உள்ள வேறு எந்த நாட்டையும் விட அதிகமான வீடியோக்களை இந்தியாவில் நீக்கியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், சமூக விதிமுறைகளை மீறியதற்காகவும், ஸ்பேம் ரக வீடியோக்களை பதிவேற்றியதற்காகவும் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் 44 லட்சம் யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் 11 லட்சம் வீடியோக்கள் அகற்றப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இவற்றில் 91 சதவீத வீடியோக்கள் யூடியூப் நிறுவனத்தின் மென்பொருள்கள் மூலம் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.

மேலும் 2022 ஜனவரி முதல் மார்ச் வரையில் 94.3 கோடி ஸ்பேம் ரக பின்னூட்டங்களும் நீக்கப்பட்டுள்ளன.பரிசு திட்டங்களை தொடர்ச்சியாக அறிவிக்கும் ஸ்பேம் ரக வீடியோக்களில் பின்னூட்டங்களில் பொய் விளம்பரங்களை பயன்படுத்தும் ஸ்பேம் ரகங்களை யூடியூப் அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

Similar News