அதிர்ச்சி.. பிரபல நடிகர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்..!

அதிர்ச்சி.. பிரபல நடிகர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்..!

Update: 2022-02-19 17:22 GMT

உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கன்னட நடிகர் கால தபஸ்வி ராஜேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 89.

கன்னட திரையுலகின் பழம்பெரும் நடிகர் கல தபஸ்வி ராஜேஷ். இவரது இயற்பெயர் முனி சவுதப்பா. பல்வேறு மேடை நாடகங்களில் நடித்தபோது அவர் வித்யாசாகர் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.


1960-ம் ஆண்டுகளுக்கு பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சினிமாவுக்காக தனது பெயரை ராஜேஷ் என மாற்றிக் கொண்டார்.

இவர் ஏராளமான கன்னடப் படங்களில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இதன் மூலம், கல தபஸ்வி ராஜேஷ் என்ற பெயரில் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

கடந்த சில நாட்களாக சிறுநீரக செயலிழப்பு, வயது முதிர்வு தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்தார். இதனால், பெங்களூரு கஸ்தூரிபா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வென்டிலேட்டர் மூலம் அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உடல் வித்யாரன்யாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 6 மணி வரை பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்படுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மறைந்த நடிகர் ராஜேஷுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். அவர்களில், நடிகர் அர்ஜுன் மனைவி ஆஷா ராணியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜேஷ் மறைவுக்கு, கன்னட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News