அதிர்ச்சி.. பிரபல இசையமைப்பாளர் காலமானார்..!
அதிர்ச்சி.. பிரபல இசையமைப்பாளர் காலமானார்..!
இந்தியாவில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்திய இசையமைப்பாளரும், பிரபல பாடகருமான பப்பி லஹரி, உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 69.
இந்தியாவில், 1980 மற்றும் 1990-களில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்திய இசையமைப்பாளரும், பாடகருமான பப்பி லஹரி கடந்த 1973-ம் ஆண்டு ‘நன்ஹா சிகாரி’ என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
தொடர்ந்து ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 1985-ம் ஆண்டு எம்.ஜெயக்குமார் இயக்கத்தில் ஆனந்த் பாபு - ஜீவிதா நடிப்பில் வெளியான ‘பாடும் வானம்பாடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் பப்பி லஹிரி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் இருந்த பப்பி லஹரி நேற்று முன்தினம் (14ம் தேதி) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஆனால், நேற்று அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. நள்ளிரவில், அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மும்பை கிரிட்டி கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.