அதிர்ச்சி.. மனைவியை 70 துண்டுகளாக வெட்டி நகர் முழுவதும் வீசிய கணவர்..!
அதிர்ச்சி.. மனைவியை 70 துண்டுகளாக வெட்டி நகர் முழுவதும் வீசிய கணவர்..!
டெல்லியை சேர்ந்தவர் ராஜேஷ். ஐடி இன்ஜினீயரான இவர் தனது காதலி அனுபமா குலாட்டி என்பவரை கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிற்கு சென்றார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அனுபமா இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
இதனிடையே, கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினர்.
நாடு திரும்பியது ராஜேஷ் கொல்கத்தாவில் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியுள்ளார். இதனால், கணவன் மனைவியிடையே தொடர்ந்து தகராறு நீடித்து வந்தது.
இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் ஒருவருடன் அனுபமா திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டதாக அவரது கணவர் சந்தேகித்தார். இதனால் ஒவ்வொரு நாளும் குடும்பத்தில் தகராறு அதிகரித்துக் கொண்டே வந்தது.
இதையடுத்து, ராஜேஷ் தன்னை ஏமாற்றி வேறு திருமணம் செய்து கொண்டதாக அனுபமா போலீசில் புகார் அளித்தார். மேலும், மாதம் ரூ.20,000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதனால், மனைவியை தீர்த்துக்கட்ட ராஜேஷ் திட்டமிட்டார்.
சம்பவத்தன்று, கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜேஷ், மனைவியை கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் அனுபமா மயக்கம் அடைந்தார். அவர் இறந்து விட்டதாக ராஜேஷ் நினைத்தார்.
ஆனால் அவர் மரணமடையவில்லை மயக்கம்தான் அடைந்தார் என்பதை அறிந்ததும் உடனடியாக அவரது மூக்கு மற்றும் வாயில் பஞ்சை திணித்துள்ளார். இதில் மூச்சுத் திணறி சிறிது நேரத்தில் அனுபமா உயிரிழந்தார்.
மனைவியின் உடலை எங்கு மறைத்து வைப்பது எனத் தெரியாமல் ராஜேஷ் திணறி உள்ளார். பின்னர், மனைவியின் உடலை 70 துண்டுகளாக வெட்டி அதை பாலிதீன் பேக்குகளில் அடைத்து 2 மாதமாக நகரின் பல பகுதிகளில் வீசி உள்ளார்.
இந்த நிலையில், தயார் குறித்து குழந்தைகள் கேட்டதும் ராஜேஷ் பலவேறு பொய்களை கூறி சமாளித்துள்ளார். அனுபமாவின் சகோதரர் சுஜன் குமார் இதுகுறித்து டேராடூன் போலீசில் புகார் செய்தார். போலீசார் ராஜேஷ் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
சந்தேகத்தின் பேரில் போலீசார் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்தனர். அதைத் திறந்தவுடன், உள்ளே இருந்து கருப்பு பாலிதீன் பேக்கில் துண்டிக்கப்பட்ட மனித உடல் உறுப்புகள் இருந்துள்ளது.
அதிர்ச்சி அடைந்த போலீசார் ராஜேஷிடம் விசாரணை நடத்தியதில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். உள்ளூர் கடையில் கல் வெட்டும் கிரைண்டர் இயந்திரம், டீப் ஃப்ரீசர் மற்றும் கருப்பு பாலிதீன் பேக்குகளை வாங்கியதாக ராஜேஷ் கூறினார்.
போலீசார் அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் டேராடூன் நீதிமன்றத்தால் ராஜேசுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 15 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.