அதிர்ச்சி.. அண்ணன் வீட்டில் தூக்கில் தொங்கிய நீதிபதி மனைவி..!

அதிர்ச்சி.. அண்ணன் வீட்டில் தூக்கில் தொங்கிய நீதிபதி மனைவி..!

Update: 2022-05-30 10:45 GMT

தலைநகர் டெல்லியின் சகர்ட் பகுதியில் உள்ள கூடுதல் அமர்வு கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வருபவர் அசோக் பெனிவால். இவர், தனது மனைவி அனுபமா பெனிவால் (420 என்பவருடன் சகர்ட் பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில், நீதிபதி அசோக்கின் மனைவி நேற்று காலை 11 மணியளவில் மார்க்கெட் செல்வதாக கூறி வீட்டை விட்டுச் சென்றார்.


ஆனால், வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நீதிபதி அசோக், தனது மனைவியை காணவில்லை என இரவு 10 மணி அளவில் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், அந்தப் பெண் ஒரு ஆட்டோவில் ஏறி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த ஆட்டோ டிரைவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பயணியை ராஜ்பூர் பகுதியில் இறக்கி விட்டது தெரியவந்தது. அந்த பகுதியில் தான் அந்த பெண்ணின் சகோதரன் வீடு உள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, அந்த பெண்ணின் சகோதரன் வீட்டிற்கு போலீசாருடன் நீதிபதி அசோக் ராஜ்பூருக்கு சென்றார். வீட்டின் மேல் தளத்தில் பெண்ணின் சகோதரன் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் கீழ் தளத்தில் உள்ள அறைகள் பூட்டப்பட்டிருந்தது.

இதனால், சந்தேகமடைந்த போலீசார் பூட்டப்பட்டிருந்த ஒரு அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு, நீதிபதி அசோக்கின் மனைவி தூக்கிட்ட நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் அசோக்கின் மனைவி எழுதி வைத்துள்ள கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News