அதிர்ச்சி ரிப்போர்ட்! பணியிடங்களில் 70% பெண்களுக்கு பாலியல் தொல்லை!!

அதிர்ச்சி ரிப்போர்ட்! பணியிடங்களில் 70% பெண்களுக்கு பாலியல் தொல்லை!!

Update: 2022-06-03 17:45 GMT

பாகிஸ்தானில் பணியிடங்களில் பெண்கள் 70% பேர் பாலியல் துன்புறுத்தல்களை சந்திப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் சமீப ஆண்டுகளாக பணியாற்றும் ஒட்டுமொத்த பெண்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. எனினும், அவர்களுக்கு எதிரான மனரீதியாக, உடல்ரீதியாக மற்றும் பாலியல் துன்புறுத்தல் விவகாரங்களும் அதிகரித்து வருகின்றன.

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பணியிடங்களில் 4,734 பெண்கள் பாலியல் வன்முறையை சந்தித்து உள்ளனர். இதனை பெண்கள் உரிமைகளுக்காக பணியாற்றி வரும் ஒயிட் ரிப்பன் பாகிஸ்தான் என்ற அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானில் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை சந்திக்கும் பெண்களின் எண்ணிக்கை 70 சதவீதம் ஆக உள்ளது. பாதுகாப்பு பற்றாக்குறை மற்றும் முறையற்ற பணிசூழல் ஆகியவற்றால் வேலையை  விட்டுவிடுகின்றனர்.

வேலை போய்விடும் என்ற பயத்தில் சிலர் புகார் அளிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. சமீப ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானில் பெண்கள் வேலைக்கு செல்வது அதிகரித்தபோதிலும், அவர்கள் பணியிட சூழலில் இதுபோன்ற துன்புறுத்தல்களை சந்திக்கும் அவலமும் அதிகரித்து உள்ளது.

newstm.in

Similar News