சென்னையில் அதிர்ச்சி.. 4 வயது சிறுமி பலாத்காரம்.. வெளி மாநில தொழிலாளி 2 பேர் கைது..!
சென்னையில் அதிர்ச்சி.. 4 வயது சிறுமி பலாத்காரம்.. வெளி மாநில தொழிலாளி 2 பேர் கைது..!
சென்னை எண்ணூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு கட்டுமானப் பணிக்காக வெளி மாநிலத்தைச் சேர்ந்த பலர் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், அங்கு தங்கி வேலை பார்த்து வந்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 4 வயது மகளை இருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர், எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சோன் (23), மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜிஷாப் சோரன்(33) ஆகிய இருவரையும் கைது செய்து சென்னை திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பாலியல் வன்கொடுமையால் காயமுற்ற 4 வயது சிறுமி, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.