தூத்துக்குடியில் அதிர்ச்சி..!! ஆண்களுக்கு கட்டாய குடும்ப கட்டுப்பாடு..!!
தூத்துக்குடியில் அதிர்ச்சி..!! ஆண்களுக்கு கட்டாய குடும்ப கட்டுப்பாடு..!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே வேம்பர் பகுதியை சேர்ந்த மதுவிற்கு அடிமையானவர்களை வலுகட்டாயமாக அழைத்துச் சென்று குடும்பக்கட்டுப்பாடு செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
டார்கெட் முடிக்க வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள வேம்பார் பகுதியை சேர்ந்த அப்பாவிகள், மதுவிற்கு அடிமையானவர்களை வலுகட்டயமாக அழைத்து சென்று குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சேர்ந்தவர் முத்துச்சேர்மன். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். தம்பதியினர் இருவருக்கு கல்வி அறிவு இல்லாத சூழலில் மிகவும் கஷ்டப்பட்டு தங்கள் குழந்தைகளை படிக்க வைத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் 25ம் தேதி முத்துச்சேர்மன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சூறவாளி என்று அழைக்கப்படும் நபர் மற்றும் சிலர் விறகு வெட்டும் வேலை உள்ளது கொஞ்சம் நேரம் தான் என்று கூறி முத்துச்சேர்மனை அழைத்துச்சென்றுள்ளனர்.
அப்போது சூறவாளி உள்ளிட்ட சிலர் தன்னை வேலைக்கு என்று அழைத்து சென்று, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து , வலுக்கட்டயமாக வாயில் பஞ்சினை வைத்து தனக்கு குடும்பக்கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்து விட்டதாகவும், தனக்கு அதிகமாக வலி இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் மருத்துவமனையில் கொடுத்ததாக ரூ 1,100க்கு காசோலையும் கொடுத்துள்ளார்.