திருச்சியில் அதிர்ச்சி.. பெண் எஸ்ஐ தூக்கு மாட்டி தற்கொலை..!
திருச்சியில் அதிர்ச்சி.. பெண் எஸ்ஐ தூக்கு மாட்டி தற்கொலை..!
திருச்சியில், பெண் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி, டிவிஎஸ் டோல்கேட் இக்பால் காலனியைச் சேர்ந்தவர் ஆதிலெட்சுமி (56). உதவி ஆய்வாளரான இவர், திருச்சி திருவெறும்பூர், நவல்பட்டு பெண்கள் காவலர் பயிற்சி மையத்தில் வார்டனாக பணியாற்றி வந்தார்.
இவருடைய கணவர் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்தத் தம்பதிக்கு லெனின் (26), பரத் (22) என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் பயிற்சி பள்ளியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை ஆதிலெட்சுமியின் அறை வெகு நேரம் திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது, ஆதிலட்சுமி தூக்கு மாட்டி தற்கொலை செய்த நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அவருடைய குடும்பத்தினர் நவல்பட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இத்தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், எஸ்ஐ ஆதிலெட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நவல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் உதவி ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.