ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்.. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு..!

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்.. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு..!

Update: 2022-06-07 10:27 GMT

தமிழக ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (7-ம் தேதி) முதல் வரும் 9-ம் தேதி வரை மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் கடை ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ‘NO Work No Pay’ என்பதன் அடிப்படையில் சம்பளத்தை பிடித்தம் செய்ய மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பதில் மாற்று ஊழியர்கள் ஏற்பாடு செய்து ரேஷன் கடைகளை திறக்கவும், மக்களுக்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News