இல்லத்தரசிகளுக்கு ஷாக்... இனி நகை வாங்க முடியாது போல..!!
இல்லத்தரசிகளுக்கு ஷாக்... இனி நகை வாங்க முடியாது போல..!!;
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் காரணமாக பங்குச் சந்தைகள் சரிவுடனேயே தொடங்குகின்றன. ஒரு சில நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றம் கண்டாலும், பெரும்பாலான பங்குகளின் விலை குறைந்தே காணப்படுகிறது. இந்த போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 776 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.39,760-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 97 ரூபாய் உயர்ந்து, ரூ.4,970-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த மாதம் இதே நாள் அதாவது பிப்ரவரி 5 ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 36,336 ஆக இருந்த தங்கம் இன்று அதே ஒரு சவரன் ரூ.39,760-க்கு விற்பனையாகிறது. கிட்டத்தட்ட 3,500 வரை உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 72,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 900 ரூபாய் உயர்ந்து ரூ.73,400-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது