பயனாளர்களுக்கு அதிர்ச்சி.. வட்டி விகிதம் 8.10% ஆக குறைப்பு..!

பயனாளர்களுக்கு அதிர்ச்சி.. வட்டி விகிதம் 8.10% ஆக குறைப்பு..!

Update: 2022-03-12 16:25 GMT

2021 - 2022-ம் நிதியாண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.50 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அசாம் தலைநகர் கவுகாத்தியில் இன்று (12-ம் தேதி) நடைபெற்ற 230-வது மத்திய வாரிய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


1977 - 1978 கால கட்டத்திற்கு பின் மிக குறைந்த வட்டி விகிதமாக இது பார்க்கப்படுகிறது. அப்போதைய வட்டி விகிதம் 8 சதவீதமாக இருந்ததே மிக குறைந்த வட்டி விகிதம் ஆகும். இந்த முடிவு 5 கோடிக்கும் அதிகமான பி.எஃப் பயனாளிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக மிகவும் குறைவாக பி.எஃப் மீதான வட்டி விகிதம் 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பி.எஃப் மீதான வட்டி விகிதத்தை 8.5 சதவீதமாக குறைத்து முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News