அதிர்ச்சி.. ஒரே பள்ளியில் மேலும் 19 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு !!
அதிர்ச்சி.. ஒரே பள்ளியில் மேலும் 19 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு !!
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்து பள்ளிகள் முழுமையாக செயல்பட தொடங்கியுள்ளது. அதன்படி கடந்த வாரம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இதனிடையே, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பரவல் அதிகரித்து, தினசரி பாதிப்பு மூன்றாயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால் முகக்கவசம் கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை ஏற்படுகிறது.
இந்த நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் சில மாணவர்களுக்கு கடந்த 2 நாட்களாக சளி, காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 12 மாணவர்களுக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
170 மாணவர்கள் படிக்கும் பள்ளியில் முதற்கட்டமாக 72 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேலும் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், 9 மாணவர்களின் பெற்றோருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் 12 வயதிற்கு உட்பட்டவர்கள். அதேநேரம் மாணவர்களுக்கு தீவிர பாதிப்பு இல்லாததால், அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், பள்ளி வளாகம் மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் வீடுகளின் சுகாதாரத்துறையினரால் கொரோனா தடுப்புப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in