அதிர்ச்சி.. எஸ்ஆர்எம் கல்லூரி மாணவி ரயில் முன்பாய்ந்து தற்கொலை !
அதிர்ச்சி.. எஸ்ஆர்எம் கல்லூரி மாணவி ரயில் முன்பாய்ந்து தற்கொலை !
கல்லூரி மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அடுத்த திருக்கச்சூர் கிராமம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் பட்டு என்ற நிரோஷா (20), காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பிஎஸ்சி நர்சிங் படித்து வந்தார்.
இந்நிலையில், வழக்கம் போல கல்லூரி செல்ல சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையத்துக்கு மாணவி சென்றுள்ளார். காலை 9:20 மணி அளவில் அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மாணவி நிரோஷா திடீரென செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில் முன் பாய்ந்துள்ளார்.
இதில், நிரோஷா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட சக பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து தகவலறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மாணவி நிரோஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த குடும்பத்தினர் அங்கு சென்று கதறி அழுதனர். இந்த காட்சி அங்கிருந்தவர்களை பெரும் சோகத்தில் தள்ளியது. இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசரணை நடத்தப்படுகிறது. குடும்ப பிரச்னையால் இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் கூறுகின்றனர்.
newstm.in