பதற வைக்கும் மரணம்..!! சுங்கச்சாவடியில் அதிவேகமாக மோதிய ஆம்புலன்ஸ்..!!
பதற வைக்கும் மரணம்..!! சுங்கச்சாவடியில் அதிவேகமாக மோதிய ஆம்புலன்ஸ்..!!;
கர்நாடக மாநிலத்தில் ஒன்னாவர் அருகே அடகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கஜன லட்சுமண நாயக். இவர் உடல் நலக்குறைவு காரணமாக பட்கல் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, ஆம்புலன்ஸ் மூலம் குந்தாப்புரா வில் உள்ள தனியா மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது உடுப்பி மாவட்டம் சிரூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே வந்த போது மாடு ஒன்று சாலையில் படுத்துக் கொண்டிருந்துள்ளது. ஆம்புலன்ஸ் வருவதை பார்த்தவுடன் சுங்கச்சாவடி ஊழியர்கள் சாலையில் படுத்திருந்த மாட்டை விரட்டினர். அதற்குள் எதிர்பாராதவிதமாக சுங்கச் சாவடி மீது மோதி ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துகுள்ளானது.
இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் லட்சுமணனநாயக் அவரது மனைவி ஜோதி நாயக்,உறவினர்களான மஞ்சுநாத மாதேவநாயக், லோகேஷ் நாயக் ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.