சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி..!
சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி..!
சென்னை, பெருங்குடி காமராஜர் நகரில் ‘கிரீன் ஏக்கர்ஸ்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று (29-ம் தேதி) இரவு, பள்ளிக்கரணையைச் சேர்ந்த பெரியசாமி (40), ஆவடியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (38) ஆகியோர் கழிவு நீர் தொட்டியில் உள்ள சகதியை வெளியேற்றி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியது. இதில், பெரியசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். தட்சிணாமூர்த்தி, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார்.
இது குறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.