அதிர்ச்சி தகவல்! இந்த 2 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா!!

அதிர்ச்சி தகவல்! இந்த 2 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா!!

Update: 2022-02-13 08:58 GMT

தமிழகத்தில் மேற்கு மாவட்டங்களில் கொரோனா தொற்றின் பரவல் சற்றே அதிகரித்துள்ளதாக மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

22ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில் அதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது பேசிய அவர், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் காட்டுகின்றனர் என்றும் அப்படி இல்லாமல், மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

இதுவரை தமிழகத்தில் முதல் தவணை 5 கோடியே 27 லட்சம் பேர் போட்டுள்ளனர். இரண்டாவது தவணையை  4 கோடியே 12 லட்சம் பேர் போட்டுள்ளனர். 5,60,019 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் 1.12 கோடி பேர் இரண்டாவது தவணை செலுத்தவில்லை என தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இணை நோய் உள்ளவர்களின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதில் மக்கள் கவன குறைவாக உள்ளனர் என தெரிவித்தார்.

தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.  கடந்த  ஒரு வாரத்தில் நோய் தொற்றின் அளவு எப்படி உள்ளது என பார்க்கும் போது மேற்கு மாவட்டம், கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் தொற்று பரவல் சற்று அதிகமாக உள்ளது.

அனைவரின் கவனமும் கொரோனா பரவுவதில் இருக்கும்போது புற்றுநோய் அதிகரித்து வருவது கவனிக்கக் கூடிய ஒன்றாகும்.  புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் உயர் தொழில்நுட்ப சிகிச்சைகள் தமிழகத்தில் வழங்கப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

newstm.in

Similar News