அதிர்ச்சி தகவல்..!! உணவு பொருட்களின் விலைவாசி 5.43% உயர்வு..!!

அதிர்ச்சி தகவல்..!! உணவு பொருட்களின் விலைவாசி 5.43% உயர்வு..!!;

Update: 2022-02-16 04:40 GMT

தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் 5.36% ஆக இருந்த சில்லைரை விலைவாசி உயர்வு விகிதம், 2022-ம் ஆண்டு ஜனவரியில் 6.01% ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஜனவரி மாதம் கிராமப்புறங்களில் சில்லரை விலைவாசி உயர்வு விகிதம் 6.12% ஆகவும், நகர்புறங்களில் 5.91% ஆகவும் அதிகரித்துள்ளது. உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு விகிதம் 2021 டிசம்பரில் 4.05% ஆக இருந்த நிலையில், 2022 ஜனவரியில் 5.43% ஆக உயர்ந்துள்ளது.

சமையல் எண்ணெய் மற்றும் கொழுப்பு ரக உணவுகளின் விலைவாசி உயர்வு விகிதம் 2021 ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் 2022 ஜனவரில் 18.70% அதிகரித்துள்ளது. ஆடைகள் மற்றும் காலணிகள் விலைவாசி உயர்வு விகிதம் 8.84% ஆகவும், எரிபொருட்கள் விலைவாசி உயர்வு விகிதம் 9.32% ஆகவும் அதிகரித்துள்ளது.

சர்வெதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு மாதத்தில் பீப்பாய் ஒன்றுக்கு 15 டாலர் அதிகரித்து தற்போது 95 டாலரை எட்டியுள்ளது. இதன் காரணமாக சில்லரை விலைவாசி உயர்வு மேலும் அதிகரிக்ககூடும் என பொருளியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Tags:    

Similar News