அதிர்ச்சி தகவல் அம்பலம்.. தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்களில் 200 வட மாநிலத்தவர்கள்..!
அதிர்ச்சி தகவல் அம்பலம்.. தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்களில் 200 வட மாநிலத்தவர்கள்..!
தமிழகத்தில், மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மற்ற மாநிலத்தவர்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் படித்து பட்டம் வாங்கிய இளைஞர், மாநிலத்தில் இயங்கும் மத்திய அரசு நிறுவனத்திலோ, ரயில்வே, என்எல்சி போன்ற நிறுவனங்களிலோ வேலையில் சேர முடிவதில்லை.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் பிற மாநிலத்தவருக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன. அந்த வகையில் டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலத்தவர்கள் அதிக அளவில் மத்திய அரசு வேலைவாய்ப்பில் இடம் பிடித்துள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு அஞ்சலகத் துறை நடத்திய தேர்வில் வட இந்தியர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதினார்கள். இவர்கள், தமிழ் பாடத்தில் 25க்கு 24 மதிப்பெண் பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்களின் தேர்ச்சி நிராகரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
வடமாநிலத்தவர்கள் மோசடி செய்து தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் சேருவதாக பல ஆண்டுகளாக புகார்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் 200-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் போலி ஆவணங்கள் மூலம் வேலையில் சேர்ந்து உள்ளது தெரியவந்துள்ளது.
தமிழக தேர்வுத்துறை வழங்கியது போல் போலி ஆவணம் கொடுத்து, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வடமாநிலத்தவர்கள் சுமார் 200 சேர்ந்துள்ளனர். அஞ்சலகத் துறை, சிஆர்பிஎஃப், இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்களில் இவ்வாறு நடந்துள்ளது.
யுபிஎஸ்சி கொடுத்த சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கையில் போலி சான்றிதழ்கள் என அரசு தேர்வுகள் துறை உறுதி செய்துள்ளது. போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தவர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்க அரசு தேர்வுகள் துறை அஞ்சலக துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.
போலி சான்றிதழ் வழங்கிய நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க, அரசுத் தேர்வுகள் இயக்ககம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்துள்ளது.