மக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. மீண்டும் உயர்கிறது பால் விலை !!

மக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. மீண்டும் உயர்கிறது பால் விலை !!

Update: 2022-04-07 09:15 GMT

இந்தியாவில் இப்போது பெட்ரோல், சமையல் எரிவாயு, காய்கறி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர். குறிப்பாக ஏழைமக்கள் பெரும் திண்டாட்டத்தில் இருக்கும் நிலையில், நடுத்தர மக்கள் ஒவ்வொரு மாதமும் வாங்கும் சம்பளம் இதுபோன்ற செலவுகளுக்கே சரியாக இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது பால் விலையும் உயர்வை சந்திக்கிறது. அதாவது, அதிவிரைவில் பால் விலை மீண்டும் உயர்த்தப்படும் என்று அமுல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்துப் பேசிய அமுல் நிறுவன நிர்வாக இயக்குநரான சோதி, விலை உயர்வு கணிசமாக இருக்கும் என்றும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

ஆற்றல் செலவுகள், லாஜிஸ்டிக் செலவுகள், பேக்கேஜிங் செலவுகள் போன்றவை அதிகரித்துள்ளதால் பால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது.

சமீபத்தில்தான் அமுல் நிறுவனம் பால் விலையை உயர்த்தியிருந்தது. மார்ச் 1 முதல் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பால் விலை 8 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலை உயர்வு பொதுமக்களை நேரடியாகப் பாதித்தாலும், இதன் மூலம் பால் விவசாயிகள் ஒருபுறம் பயன்பெறுகின்றனர். எனவே அவர்களது வாழ்வாதாரம், தொழில் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பால் விலையை கூட்டுறவு நிறுவனங்கள் உயர்த்துகின்றன.

தற்போதைய அறிவிப்பின்படி, பால் விலை எவ்வளவு உயரும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. ஆனால் கடந்த முறை உயர்த்தப்பட்டதை விட அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Similar News