அதிர்ச்சி கொடுத்த ஆவின்.. பால் பொருட்கள் விலை உயர்வு..!
அதிர்ச்சி கொடுத்த ஆவின்.. பால் பொருட்கள் விலை உயர்வு..!
தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பால் பொருட்களில் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக ஒருங்கிணைந்த பால்வளத்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.
அதன்படி ஒரு லிட்டர் ஆவின் நெய் ரூ.515-ல் இருந்து ரூ.535 ஆகவும், அரை லிட்டர் தயிர் ரூ.27-ல் இருந்து 30 ஆகவும், குல்பி ரூ.25-ல் இருந்து ரூ.30 ஆகவும், 200 கிராம் பாதாம் பவுடர் ரூ.80-ல் இருந்து ரூ.100 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஒருங்கிணைந்த பால்வளத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வுக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘தமிழக முதல்வர் அவர்கள் ஆவின் பால் பொருட்கள் விற்பனை விலை உயர்வு விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பொதுமக்கள் தலையில் ஆவின் நிர்வாகம் சுமத்தி இருக்கும் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற உத்தரவிடுவதோடு, ஆவின் பால் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.