அதிர்ச்சி தீர்ப்பு..!! லிப்லாக் முத்தமும் பிறப்புறுப்பை தொடுதலும் குற்றமில்லை..!!
அதிர்ச்சி தீர்ப்பு..!! லிப்லாக் முத்தமும் பிறப்புறுப்பை தொடுதலும் குற்றமில்லை..!!
மகாராஷ்டிரா மாநிலம், மும்யைச் சேர்ந்த ஒருவரின் வீட்டு பீரோவில் இருந்த பணம் மாயமாகியுள்ளது. இது குறித்து அவரது தந்தை தனது மகனிடம் கேட்டுள்ளார்.
இதற்கு அவர் செல்போனை ரீசார்ஜ் செய்ய பணத்தை எடுத்தாக கூறியுள்ளார். மேலும் செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடையின் உரிமையாளர் தன் உதட்டில் முத்தமிட்டதாகவும், தனது உறுப்பில் கை வைத்து தவறாக நடந்து கொண்டதாகவும் சிறுவன் தந்தையிடம் கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து செல்போன் கடையின் உரிமையாளரை கைது செய்தனர். இந்த வழக்கிலிருந்து ஜாமீன் கேட்டு செல்போன் கடையின் உரிமையாளர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனுஜா பிரபுதேசாய், ஒருவரின் உதட்டில் முத்தமிடுவதும், உடலை தீண்டுவதும் இயற்கைக்குப் புறம்பான குற்றமல்ல.
மேலும் மருத்துவப் பரிசோதனையில் சிறுவன் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது. எனவே மனுதாரர் ரூ.30 ஆயிரம் செலுத்தி சொந்த ஜாமீன் பெற்றுக் கொள்ளளலாம் என உத்தரவிட்டுள்ளார். நீதிபதியின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.