துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ் : ஜெயக்குமார் காட்டம்!!
துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ் : ஜெயக்குமார் காட்டம்!!
துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசைன் தலைமையில் நடைபெற்றது. காலை 10 மணிக்கு துவங்கிய கூட்டம் 11.30 மணிக்கு முடிவடைந்தது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
75 தலைமை கழக நிர்வாகிகளில் 65 நபர்கள் வந்திருந்தனர். 5 நபர்கள் கூட்டத்தில் பங்கேற்க முடியாதது குறித்து கடிதம் அனுப்பி உள்ளனர். பெரும்பாலன நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தின் அடையாளம் என்றும், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அவருடைய செயல்பாடுகள் அப்படிதான் உள்ளது என்றும் அவர் கட்சியின் பொருளாளர் பதவியில் நீடிப்பாரா? இல்லையா என்பது பொதுக்குழு கூட்டத்தில்தான் தெரியவரும் என்றார்.
ஓபிஎஸ் ஆதரவாளர்களை கட்டாயபடுத்தி அழைக்கவில்லை; அப்படி ஒரு நிலையிலும் நாங்கள் இல்லை; எங்களுடன் உள்ளவர்கள் உண்மையான தொண்டர்கள் என்று ஜெயக்குமார் பேசினார்.
newstm.in