முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார் சிவகார்த்திகேயன்.. காரணம் என்ன தெரியுமா..?

முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார் சிவகார்த்திகேயன்.. காரணம் என்ன தெரியுமா..?

Update: 2022-03-27 04:55 GMT

சுற்றுலா நகரமான புதுச்சேரியில் நடைபெறும் படப்பிடிப்பிற்கு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் நகராட்சி சார்பில் வரியாக வசூலிக்கப்பட்டு வந்தது.

அதன் பிறகு கொரோனா பெருந்தொற்று காரணமாக உயர்த்தப்பட்ட வரியினால், தற்போது 25 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது SK 20 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, நடிகர் சிவகார்த்திகேயன் சட்டப்பேரவை வளாகத்தில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, உயர்த்தப்பட்ட படப்பிடிப்பின் வரியை குறைக்கக் கோரி வலியுறுத்தினார்.

இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, வரியை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி உறுதி அளித்தார்.

Similar News