சிவகார்த்திகேயன் சம்பள பாக்கி விவகாரம்… புதிய உத்தரவு!!

சிவகார்த்திகேயன் சம்பள பாக்கி விவகாரம்… புதிய உத்தரவு!!

Update: 2022-04-26 07:45 GMT

சிவகார்த்திகேயனின் சம்பள பாக்கி விவகாரத்தில் தீர்வு காண மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பியது

சென்னை உயா் நீதிமன்றத்தில் நடிகா் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவில், தனது நடிப்பில்மிஸ்டா் லோக்கல்படத்தைத் தயாரிப்பதற்காக, கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலையில் தயாரிப்பாளா் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு, ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதத்தில் படம் வெளியான நிலையில், இதுவரை ரூ.11 கோடி மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டு, ரூ.4 கோடி பாக்கி வைத்துள்ளார் என குறிப்பிட்டிருந்தார்.

ரூ.11 கோடிக்கான டிடிஎஸ் தொகையைப் பிடித்தம் செய்த ஞானவேல்ராஜா, அதை வருமான வரித்துறையில் செலுத்தாததால் கடந்த 2019-20, 2020-21ஆம் ஆண்டுகளுக்கான டிடிஎஸ் தொகை 91 லட்ச ரூபாயை செலுத்த வேணடுமென எனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து முன்னரே வழக்கு தொடுத்துள்ளேன்.

எனவே, ரூ.4 கோடி சம்பள பாக்கியை எனக்கு செலுத்துவதற்கும், பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வருமான வரித் துறையிடம் செலுத்துவதற்கும் தயாரிப்பாளா் ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும்

தொகை செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரித்து வரும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும்ரிபெல்’, விக்ரம் நடிக்கும்சீயான்61’, சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும்பத்து தலஆகிய படங்களில் மேற்கொண்டு முதலீடுகளை செய்வதற்கும், திரையரங்க வெளியீடு, ஓடிடி வெளியீடு ஆகியவற்றின் விநியோக உரிமைகளை உறுதி செய்வதற்கும் தடை விதிக்க வேண்டுமென கோரியிருந்தார்.

இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பள பாக்கி விவகாரத்தில் தீர்வு காண மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பியது. மேலும் ஞானவேல்ராஜா தயாரிக்கும் 3 படங்களை வெளியிடத் தடை கோரிய சிவகார்த்திகேயனின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.

newstm.in

Similar News