அஜித் பட இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் ?
அஜித் பட இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் ?;
சிவவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘டான்’.இப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.தற்போது சிவகார்த்திகேயன் அயலான், பிரின்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்
பிரின்ஸ் படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார்.தெலுங்கு திரைப்படமான ‘ஜாதி ரத்னாலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ஃபேமிலி என்டர்டெயினராக இந்தப் படம் வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை-28, மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட பல படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும், இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.