தூக்கத்தில் நடந்த விபரீதம்.. நடந்தபோது விழுந்த டிரைவர் உயிரிழப்பு..!
தூக்கத்தில் நடந்த விபரீதம்.. நடந்தபோது விழுந்த டிரைவர் உயிரிழப்பு..!
திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (32). இவர், தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருடைய தாயும், தந்தையும் இறந்து விட்டதால், தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.
இவர் கடந்த 12-ம் தேதி அதிகாலை, வீட்டின் மொட்டை மாடியில் தூங்கியுள்ளார். அப்போது, திடீரென்று எழுந்த சசிகுமார் தூக்கத்தில் நடக்க ஆரம்பித்துள்ளார். இதில், மொட்டை மாடியின் ஓரத்திற்கு சென்ற அவர் கால் தவறி கீழே விழுந்துள்ளார்.
அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர், சசிகுமாரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து வேலூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த சசிகுமார், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சசிகுமாரின் அண்ணன் தமிழரசன் அளித்த புகாரின் பேரில், களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.