அப்போ ஷவர்மா இப்போ ரோஸ் மில்க்..? சென்னையில் சிறுவன் பரிதாப பலி!

அப்போ ஷவர்மா இப்போ ரோஸ் மில்க்..? சென்னையில் சிறுவன் பரிதாப பலி!

Update: 2022-05-29 05:00 GMT

 துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன். இவருக்கு திவ்யா என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகன் வசந்தகுமார் (11), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்றிரவு சிறுவன் வசந்தகுமார் அப்பகுதியில் உள்ள கடையில் ரோஸ்மில்க் வாங்கி குடித்துள்ளார். வீட்டிற்கு சென்றவுடன் சிறுவன் வசந்தகுமார் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே திவ்யா தனது மகனிடம் என்ன ஆச்சு என கேட்ட போது ரோஸ்மில்க் வாங்கி குடித்ததிலிருந்து வாந்தி மயக்கமாக  வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

உடனே திவ்யா 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மகன் வசந்தகுமார் அழைத்து சென்றார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த திவ்யா, இது குறித்து கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவர் அளித்த புகாரின்பேரில், அங்கு சென்ற போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுவன் பெத்துராஜ் என்பவர் கடையில் ரோஸ்மில்க் வாங்கி குடித்தது தெரியவந்ததை அடுத்து போலீசார் பெத்துராஜிடம் விசாரணை நடத்தினர்.

Similar News