ஒரு ஆண்டில் மட்டும் இத்தனை பாலியல் குற்றங்களா..?: தேசிய குற்ற ஆவண காப்பகம் பகீர் தகவல்..!

ஒரு ஆண்டில் மட்டும் இத்தனை பாலியல் குற்றங்களா..?: தேசிய குற்ற ஆவண காப்பகம் பகீர் தகவல்..!

Update: 2022-02-11 13:35 GMT

இந்தியா முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டு சைபர் குற்றங்கள் 11 சதவிகிதம் வரை அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில், கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 50 ஆயிரத்து 35 வழக்குகள் சைபர் குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது, கடந்த 2019-ம் ஆண்டை விட 11.8 சதவிகிதம் அதிகம்.

2020-ம் ஆண்டு பதிவான 50 ஆயிரத்து 35 வழக்குகளில், 30 ஆயிரத்து 142 வழக்குகள் மோசடியை உள்நோக்கமாக கொண்டவை என்றும், இது மொத்த வழக்குகளில் 60.2 சதவிகிதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, 6.6 சதவிகிதம் வரை, அதாவது 3 ஆயிரத்து 293 வழக்குகள் பாலியல் தொடர்புடையவை என்றும் கூறப்பட்டுள்ளது. புதுப் புது வழிகளில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப், ராஜஸ்தான், கோவா, அசாம் மாநிலங்களில் ஒரு சைபர் குற்ற விசாரணை அமைப்பு கூட இதுவரை நிறுவப்படவில்லை என்றும், எனவே மாநில அரசுகள் சைபர் குற்றங்களை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்ற விசாரணை அமைப்புகளை நிறுவ வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News